#BigBreaking || அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை., ஓபிஎஸ், அண்ணாமலை அடுத்தடுத்து அளித்த பேட்டி,! - Seithipunal
Seithipunal


சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தலைவர்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் நடத்தி வந்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவித்தாவது, "இன்றைய இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று முடிந்துள்ளது. மீண்டும் இந்த பேச்சுவார்த்தை நடக்கும்., நடத்த இருக்கிறோம்.

எங்களைப் பொறுத்தவரை வலுவான ஒரு எதிர்க்கட்சியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் சரி ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு செய்யக்கூடிய அனைத்து தவறுகளையும் மக்கள் மன்றத்தில் வைத்து, நிறைய கேள்விகளை கேட்டு, அதன்படி திமுகவில் தன்னை சரிப்படுத்திக் கொள்வதற்காக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக தலைமையில் அனைவரும் பங்காற்றி கொண்டிருக்கிறோம்.

உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 4ம் தேதி வரை வேட்புமனுகாண கால அவகாசம் உள்ளது. இப்போது முதல்கட்ட பேச்சுவார்த்தை முடித்து இருக்கிறோம். இன்னும் பேச்சுவார்த்தை தொடர்வோம், இந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிந்த பிறகு, இறுதி ஆன பிறகு பத்திரிக்கையாளர்களின் நண்பர்களை சந்தித்து அனைத்து விவரங்களையும் தெரிவிக்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.

இதுபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவிக்கையில், இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


முன்னதாக, அதிமுக பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகின.

வெளியான தகவலின்படி, மாநகராட்சிகளில் அதிக இடங்களை வழங்க முடியாது என அதிமுக தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், அதே சமயத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் குறிப்பிட்ட இடங்களைத் தர அதிமுக முன்வந்துள்ளதாகவும் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
குறிப்பாக கோவை, திருப்பூர், நெல்லை, நாகர்கோவில் ஆகிய 4 மாநகராட்சிகளை பாஜகவுக்கு ஒதுக்கும்படி அக்கட்சி வலியுறுத்துவதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops and annamalai say about local body election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->