முக்கிய புள்ளியின் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! வெளியான அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் செயல்பட, ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் ஒருபக்கம் செயல்படுகிறார்.

இந்நிலையில், ஓபிஎஸ் ஒப்புதலோடு, அதிமுக தலைமை கழகம் என்று குறிப்பிட்டு "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்" நடைபெற உள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், 

சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் 21-12-2022 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கழக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது."

என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Announce ADMK Meet 2112


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->