வி.என் ஜானகியின் 100வது பிறந்தநாள்..! கழகத் தொண்டர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்..! ஓபிஎஸ் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனின் 100வது பிறந்த நாள் தொடக்கத்தை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் "அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனரும் மூன்று முறை தொடர்ந்து தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவரும் தமிழக மக்களின் உள்ளங்களில் இன்றளவும் குடி கொண்டவருமான பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருவான மறைந்த ஜானகி அம்மையாரின் நூறாவது பிறந்தநாள் விழா தொடக்கத்தினை ஒட்டி அவருக்கு என் வணக்கத்தினையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்களின் நலனுக்காக அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை எம்ஜிஆர் ஆரம்பித்த பொழுது சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள இடத்தை கட்சிக்காக கொடுத்தவர் வள்ளல் ஜானகி அம்மையார். அந்த இடத்தில் தான் அதிமுகவின் தலைமை கழகமான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகை இன்றளவும் செயல்பட்டு வருகிறது. 

எம்ஜிஆரின் மறைவிற்கு முன்பே அந்தக் கட்டிடத்தை எம்ஜிஆரின் பெயரில் பத்திரப்பதிவு செய்த பெருமைக்குரியவர் ஜானகி அம்மையார். மேலும் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையும் ஜானகி அம்மையாரையே சாரும். கட்சியின் ஒற்றுமை தான் முக்கியம் என்ற நோக்கத்தோடு செயல்பட்ட ஜானகி அம்மையாரின் புகழ் அவர் செய்த தியாகம் என்றென்றும் அனைவரின் உள்ளத்திலும் குறிப்பாக அதிமுக தொண்டர்களின் உள்ளத்திலும் நிலைத்து நிற்கும்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் தரைத்தளத்தில் உள்ள முக்கிய நபர்கள் அறைக்கு வி.என் ஜானகி அம்மையார் பெயர் சூட்ட வேண்டும் என்றும், முதல் தளத்தில் உள்ள கூட்ட அறைக்கு புரட்சித்தலைவி அம்மா பெயர் சூட்ட வேண்டும் என்றும் கழகத் தொண்டர்களால் என்னிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை. மேலும் சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் உரிய அனுமதி பெற்று எம்.ஜி.ஆர் மற்றும் அவரது மனைவி வி.என் ஜானகி அம்மையாரின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும்" என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS announced vn janaki statue will be erected in tnager


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->