முடிவை மாற்றிக்கொண்ட ஓபிஎஸ்! 11வது முறை... அதிமுகவிற்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவாக களமிறங்க வேண்டும் என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிளவுற்றுக் கிடக்கும் இதே நிலையோடு, நடைபெற இருக்கின்ற விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலை எதிர்கொண்டு, பதினோறாவது தொடர் தோல்வியை வரவு வைத்துக் கொள்வதா, இல்லை ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கம்பீர மிடுக்கோடு கட்சியை களமிறக்கி 2019-ல் இதே விக்கிரவாண்டி தொகுதியில் நாம் ஈட்டிய அன்றைய அதே இடைத் தேர்தல் வெற்றியை மீண்டும் நிலைநாட்டி அதிமுகவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வரப் போகிறோமா என்கிற ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் ததும்பி நிற்கிறது.

எனவே, கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்காமல் கட்சியைக் கைப்பற்றி கொள்வதினும் கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும்.” ஏன்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்த அறிக்கையில் "சுயநலத்தோடு சிந்திக்காமல் கட்சியைக் கைப்பற்றி கொள்வதினும் கட்சியை காப்பாற்றுவதே முக்கியம்" என்கிற ஓபிஎஸ்-ன் முடிவினை அதிமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும், ஓபிஎஸ் கட்சியை வைத்து நீக்கிய பின்பு தான் கட்சி வளர்ந்து வருவதாகவும், அவர் கட்சிக்கு தேவையில்லை என்றும் அதிமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், பாஜக கூட்டணியில் இணைந்து அதிமுகவிற்கு எதிராக போட்டியிட்ட ஓபிஎஸ், இந்த இடைத்தேர்தலில் ஏன்திடீர் அக்கறை கொள்கிறார். ஒருவேளை பாஜக ஓபிஎஸ்-யை கழட்டிவிட்டதோ என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Change his Decision ADMK BJP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->