இது துரோகம்! அவரை பதவியிலிருந்து நீக்குங்கள்! சற்றுமுன் ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை!
OPS Condemn to DMK Minister ponmudi MK Stalin
அநாகரிகமான வார்த்தைகளை பொதுமேடையில் பேசும் வனம் மற்றும் கதர்த் துறை அமைச்சர் பொன்முடியை, அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "அண்மையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பெண்களை தரக்குறைவாக, அநாகரீகமாக, நாகூசும் வார்த்தைகளால் பேசிய வனம் மற்றும் கதர்த் துறை அமைச்சர் பொன்முடி பேசி இருக்கிறார்.
அவர் சொன்னதை சொல்வதே அநாகரீகம். உயர் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த ஒருவர், தற்போது வனம் மற்றும் கதர்த் துறை அமைச்சராக இருப்பவர்,
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்பால் பதவி ஏற்றுக் கொண்டவர் பெண் இனத்தை கேவலமாகப் பேசுவது என்பது முறையற்ற செயல்.
இது ஏற்புடையதல்ல. பொன்முடியின் நாகரிகமற்ற பேச்சுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிப்பட்ட ஒருவரை அமைச்சர் பதவியில் வைத்துக் கொண்டிருப்பது பெண் இனத்திற்கு செய்யும் துரோகம்.
எனவே, பொன்முடி அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு முதலமைச்சர் அவர்களுக்கு உண்டு என்பதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
OPS Condemn to DMK Minister ponmudi MK Stalin