ஓ பன்னீர்செல்வத்தை பெரும் துயரத்தில் ஆழ்த்திய மரணம்! - Seithipunal
Seithipunal


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணிகளில் முக்கிய பங்கு வகித்தவரும், தமிழக காவல்துறையின் முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவில் சார் ஆய்வாளராக பணியாற்றி வந்தவருமான சீமைச்சாமி இன்று உடல் நலக் குறைவால் காலமானார்.

இந்நிலையில், சீமைச்சாமி மறைவுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரின் அந்த இரங்கல் செய்தியில், "மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், பதினெட்டாங்குடியைச் சேர்ந்தவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. K. தமிழரசன் அவர்களின் சகோதரரும், தமிழ்நாடு காவல் துறையின்கீழ் செயல்பட்டு வரும் முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவில் சார் ஆய்வாளராக பணியாற்றி வருபவருமான திரு. K. சீமைச்சாமி அவர்கள் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். 

மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பாதுகாப்புப் பிரிவில் அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றிய பெருமை அவருக்கு உண்டு. மாண்புமிகு அம்மா அவர்களின் பாதுகாப்புப் பணிகளை திறம்பட மேற்கொண்டதில் முக்கியப் பங்கு வகித்தவர் திரு. சீமைச்சாமி அவர்கள். திரு. சீமைச்சாமி அவர்களின் பணி போற்றத்தக்கது.

திரு. சீமைச்சாமி அவர்களை இழந்து இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Mourning to Seemaisami


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->