அது எதுமே செல்லாது., செல்லாது., ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி.!
OPS PRESS MEET JULY 14
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 18 பேரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி, அதிமுகவின் தலைமை எடப்பாடி கே பழனிசாமி நடவடிக்கை எடுத்து இருந்தார். அதன்படி,
பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப், அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளர் சையது கான், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சுப்ரமணியம், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் வைரமுத்து, தெற்கு மாவட்ட செயலாளர் சைதை பாபு ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வெங்கட்ராமன், கோபாலகிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், ராமச்சந்திரன், அசோகன், ஓம் சக்தி, சேகர், கோவை செல்வராஜ், மருது அழகராஜ், ரமேஷ், வினிபாலன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, அஞ்சுலட்சுமி ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அதிமுகவிலிருந்து ரவீந்திரநாத் எம்.பி.,யை நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்ச நிலை என்று, ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சி சட்ட விதிகளின்படி எடப்பாடி பழனிசாமியின் எந்த அறிவிப்பும் செல்லாது என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதேபோல், உண்மையான அதிமுக நாங்கள்தான் என்றும், எங்களை அவர்கள் நீக்கியது செல்லாது என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்