பாஜகவின் நெருக்கடியால்... ஓ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு.. கூட்டணியில் களேபரம்.!!
Ops reconsider alliance with BJP
மக்களவைப் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி முடிவு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக தலைமை நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.
பாஜக தலைமை எல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கும் வகித்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகளுக்கு தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் இன்று காலை ஓபிஎஸ் அணியினர் சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ்-க்கு மரியாதை தராத பாஜக கூட்டணியில் இரந்துஜ வெளியேற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் அணியின் ஆளு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே ஓபிஎஸ் நாளை காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக கூட்டணியில் போட்டியிடுவதா? ஆதரவு மட்டும் தெரிவிப்பதா? என்பது குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக உடனான தொகுதி பங்கேற்று பேச்சு வார்த்தையின் போது தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் 3 தொகுதிகள், தனிச்சின்னத்தில் போட்டியிட்டால் 1 தொகுதி தான் என பாஜக நிபந்தனை விதித்ததால் ஓபிஎஸ் அணியினர் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் பாஜக தலைமையிலான கூட்டணியில் தனிச் சின்னத்தில் போட்டியிடவே ஓபிஎஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Ops reconsider alliance with BJP