இது மட்டும் நடந்தால் திமுகவுக்கு மரண அடி நிச்சயம் - ஓபிஎஸ் கொந்தளிப்பு.! - Seithipunal
Seithipunal


2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் உடன், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலும் வரும் என்று, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதல் அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று திருச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, ஓ பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "இன்னும் 2 ஆண்டுகளில் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தலோடு சேர்த்து, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும்" என்று தெரிவித்தார்.

மேலும் அவர் அந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில்,

"முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் முதல் கையெழுத்தை நீட் தேர்வு ரத்து என்று என்று சொன்னார் ஸ்டாலின்., என்ன ஆச்சு.,? முடியவில்லையா.,? அவர்களால் எப்படி முடியும்., முடியாது. 

யாரைப் போய் சந்தித்து, நீட் விலக்கு பெற வேண்டுமோ., அதை செய்யாமல் வாய் சவடால் விட்ட அவர்களுடைய பகல் வேஷம் இன்று கலைந்து இருக்கிறது.

இந்த தேர்தல் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றியை நாம் பெற்றுவிட்டோம் என்று சொன்னால், திமுக என்ற கட்சிக்கு சரியான மரண அடி கிடைக்கும்.

இன்னும் இரண்டு வருடத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது., இந்த தேர்தலோடு தமிழக சட்டமன்றத்திற்கு உறுதியாக தேர்தல் வரும்., எழுதிக்கொள்ளுங்கள்" என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS SAY ABOUT 2024 TN ELECTION


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->