#BREAKING | இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஓபிஎஸ்! கேஜிஎஃப்., கால் பதிக்கும் அந்த வேட்பாளர்!
OPS Second list Karnataka election
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் பெங்களூரு புலிகேசி நகர் தொகுதியில் அம்மாநில அவைத் தலைவர் அன்பரசன் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பையும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளிட்டு இருந்தார்.
இந்த நிலையில், புலிகேசி நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நெடுஞ்செழியன் என்பவரை வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த ஓபிஎஸ் அறிவிப்பில், கர்நாடக மாநில மாணவர் அணி செயலாளர் எம்.நெடுஞ்செழியன் புலிகேசி நகர் தொகுதியில் நிறுத்தப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அறிவிக்கப்பட்ட இரண்டாம் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அதிமுக சார்பில் பெங்களூரு புலிகேசி நகர் தொகுதியில் அம்மாநில அவைத் தலைவர் அன்பரசன் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் நெடுஞ்செழியன் என்பவரை வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "10/05/2023 அன்று நடைபெற உள்ள கர்நாடக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகார பூர்வ வேட்பாளராக புலிகேசி நகர் தொகுதியில் எம்.நெடுஞ்செழியன், கர்நாடக மாநில மாணவர் அணி செயலாளர் நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு வழங்கிய நிலையில், அதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இரு நபர் அமர்வு அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற எந்த தடையும் இல்லை என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி போட்டி இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தொடர்பான ஆவணங்கள் மீது இந்திய தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுக்க உள்ள நிலையில் ஓபிஎஸ் அதிமுக சார்பில் பெங்களூர் புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளரை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
OPS Second list Karnataka election