தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் தற்காலிகம் தான்! பரபரப்பை கிளப்பும் பகீர் பேட்டி! - Seithipunal
Seithipunal


கடந்தாண்டு ஜூன் மாதம் அதிமுகவின் பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. அதில் குறிப்பாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்களை அதிமுகவிலிருந்து நீக்கி, சிறப்பு தீர்மானத்தை பொதுக்குழு நிறைவேற்றி இருந்தது.

மேலும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொது செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு, போட்டியின்றி எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது அனைத்தையும் எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

அந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று நடைபெற்று முடிந்த நிலையில், நாளையும், தேவைப்பட்டால் வருகின்ற 24-ஆம் தேதியும் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய உள்ளது.

இது ஒரு புறம் இருக்க இன்று அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளரை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், அதிமுக பொதுகுழு தீர்மானம் படி ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனையும் தேர்தல் ஆணையமும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

அதே சமயத்தில், இது அனைத்தும் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் முடிவுகளுக்கு உட்பட்டது என்ற ஒரு நிபந்தனையையும் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "தேர்தல் ஆணையம் கொடுத்த ஒப்புதல் கர்நாடக தேர்தலுக்கான தற்காலிக முடிவு மட்டும் தான்.

தேர்தல் ஆணையத்தின் கடிதத்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு அங்கீகாரம் கிடைத்ததாக கருத முடியாது. தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள ஒப்புதல் நீதிமன்றம் முடிவுக்கு உட்பட்டது.

ஒருவரை நீக்க வேண்டுமானால் முதலில் விளக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதனை அவர்கள் கொடுக்கத் தவறி விட்டார்கள்" என்று  பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Side press meet about EC order ADMk GS EPS


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->