ஒரே நாடு; ஒரே தேர்தலுக்கு முழு ஆதரவு!! - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்திடும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதற்காக ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவையும் அமைத்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாஜக ஆதரவு இனிய காலை கொண்ட அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. 

அந்த வகையில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கை முடிவு வரவேற்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் கொள்கை முடிவு என்ன அதிமுக சார்பில் முதற்கண் வரவேற்கிறேன்.

மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் சில விதிவிலக்குகளை தவிர 1967 ஆம் ஆண்டு வரை ஒரே சமயத்தில் நடத்தப்பட்டு வந்தன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதற்குப் பிறகு மத்திய அரசால் பல மாநில அரசுகள் அவ்வப்போது கலைக்கப்பட்டதன் காரணமாகவும், முன்கூட்டியே சில மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டதன் காரணமாகவும், மக்களவைத் தேர்தல் ஒரு சமயத்திலும் மாநில சட்டமன்ற தேர்தல்கள் மற்றொரு காலகட்டத்திலும் நடத்தப்பட்டு வருகின்றன.

அவ்வப்போது தேர்தல் நடத்துவதன் காரணமாக அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதோடு அடிக்கடி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதன் காரணமாக வளர்ச்சி திட்டங்கள் தடைப்படும் சூழ்நிலையும் உருவாகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முழக்கம் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்தாலும் அதற்கான முன்னெடுப்பினை தற்போது மத்திய அரசு எடுத்துள்ளது. வருகின்ற 2024ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட இருப்பதை முன்னிட்டு இதனுடன் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சில மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களையும் நடத்த வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து சாத்தியக்கூறுகளை ஆராய இந்தியா முன்னாள் குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க ஒன்று.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கை முடிவு நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இன்னும் சில ஆண்டுகளில் மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக்கூடிய நிலை உருவாகுவதோடு மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் தங்கு தடை இன்றி மக்களை சென்றடையக்கூடும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பத்தில் பல்லாயிரக்கணக்கான வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பி.ஏ.டி இயந்திரங்கள் வாங்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் செலவு ஏற்படும் என்றாலும் தொலைநோக்கு பார்வையில் இதனை உற்று நோக்கும்போது வருங்காலத்தில் தேர்தலுக்கான செலவு கணிசமாக குறைக்கப்படும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

அடுத்த ஆண்டு வரவேற்கின்ற மக்களவைத் தேர்தலுக்குள் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டத்தில் ஐந்து திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மக்களின் நலனையும் நாட்டின் வளர்ச்சியும் கருத்தில் கொண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கை முடிவினை மனதார பாராட்டுவதோடு அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கு அதிமுக தனது முழு ஒத்துழைப்பினை அழிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS support to one nation one election scheme


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->