எடப்பாடி பழனிச்சாமியை ஏற்க மக்கள் தயாராக இல்லை என்பதையே.. ஓபிஎஸ் ஆதாரவாளர் புகழேந்தி பேட்டி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 76,834 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 48 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 28,637 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்க வைத்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனின் வெற்றி உறுதியாகிவிட்டது.

அதிமுகவின் இரட்டை தலைமை விவகாரத்தில் நிலவுக்குப் பின் சந்தித்த முதல் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு இது ஒரு பெரும் அடியாக விழுந்துள்ளது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பவானியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக் கொள்வதற்கு மக்கள் தயாராக இல்லை என்பதையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

நாளை நாடாளுமன்ற தேர்தலிலும் இதே நிலைமைதான்.‌ எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாட்டால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். ஓபிஎஸ் இல்லாவிட்டால் எடப்பாடி பழனிச்சாமியார் ஒரு வெற்றி கூட பெற முடியாது. பத்தாவது சுற்றில் தான் அதிமுக டெபாசிட் பெறுகிறது.

அதிமுக தேர்தல் வரலாற்றில் இது மிக மோசமான தோல்வி இதற்கு காரணம் ஒற்றுமை இல்லாதது. இப்போதும் காலம் கடந்து விடவில்லை தாயை இழந்து வாடும் கழகத் தலைவர் முன்னாள் முதலமைச்சர் அதிமுக ஒரு ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து மீண்டும் ஒற்றுமையுடன் செயல்பட ஆதரவு கேட்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS supporter pugazhenthi roasted EPS for erode by election defeat


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->