ஈரோடு இடைத்தேர்தல்.. பின்வாங்கிய ஈபிஎஸ்.. ஒபிஎஸ் தரப்பு வேட்பாளர் வேட்புமனு தாக்கல்.!
OPS team candidate senthil murugan nomination
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சி சார்பில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிட உள்ளதாக அறிவித்த நிலையில் ஈபிஎஸ் தரப்பினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இதில், ஈபிஎஸ் அணி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் தென்னரசு களமிறக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பாஜகவின் நிலைப்பாட்டிற்காக காத்திருந்த நிலையில் தங்கள் அணியின் வேட்பாளராக செந்தில்முருகன் போட்டியிடுவார் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஒபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஈபிஎஸ் அணி வேட்பு மனு தாக்கலை ஒத்திவைத்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
English Summary
OPS team candidate senthil murugan nomination