மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் ஓபிஎஸ்! வெயிட்டிங் லிஸ்டில் இபிஎஸ்! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அமித்ஷாவை தமிழக பாஜக நிர்வாகிகள் நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அமித்ஷா சென்னைக்கு வருகை புரிந்தால் தனியா நட்சத்திர விடுதியில் தங்குவது வழக்கம் ஆனால் இந்த முறை ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார். ஆளுநர் மாளிகைக்கு வந்த அமித்ஷாவை ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

இன்று காலை 11 மணி அளவில் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவில் அமைச்சர் பங்கேற்கிறார். அங்கேயே அவருக்கு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் ராஜ்பவன் வரும் அமித்ஷாவை சந்திக்க இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் நேரம் கேட்டுள்ளனர். தற்பொழுது ஓபிஎஸ் பிற்பகல் 2:30 மணிக்கு அமித் ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் ஒன்றுபட்ட அதிமுக குறித்து அமித்ஷாவுடன் ஓ.பன்னீர்செல்வம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் பழனிச்சாமியோ ஒரு சதவீதம் கூட பன்னீர் செல்வத்தை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பழனிச்சாமிக்கு இன்னும் அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. நேற்று விமான நிலையத்தில் பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வத்தை சந்தித்த பிரதமர் மோடி இருவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஓபிஎஸ்-ன் இந்த சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS to meet the Union Minister Amitshah


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->