தலித் மக்களின் நலனில் அக்கறை கொண்டு... இயக்குநர் பா.ரஞ்சித் பரபரப்பு டிவிட்! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி படுகொலை செய்யப்பட்ட நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய ஒருங்கினைப்பாளர்கள் Dr. அசோக்சித்தார்த், கோபிநாத் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், "பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் பேகன்ஜி மாயாவதி அவர்களின் விரிவான பரிசீலனை மற்றும் ஆலோசனையின் முடிவில், தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், மாநில தலைவராக P.ஆனந்தன் அவர்களையும், மாநில துணை தலைவராக T. இளமான் சேகர் மற்றும் மாநில பொருளாளராக கமலவேல்செல்வன் அவர்களையும் நியமித்துள்ளார்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய ஒருங்கினைப்பாளர், மாநில தலைவருக்கு, இயக்குனர் பா.ரஞ்சித் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் திரு.பி. ஆனந்தன் அவர்களையும், மாநில ஒருங்கிணைப்பாளராக திருமதி.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களையும் தேர்ந்தெடுத்திருப்பதை முழுமனதுடன் வரவேற்று, என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த சமத்துவத் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தன்னலமற்ற கள செயற்பாட்டைப் போல தலித் மக்களின் விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும், சுயமரியாதைக்காகவும் எவ்விதமான சமரசமும் பின்வாங்கலும்  இல்லாமல் சித்தாந்தத் தெளிவுடன் பாபாசாகேப் அம்பேத்கர் கண்ட கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கவும், தலித் மக்களின் நலனில் அக்கறை கொண்டு களம் காணவும் மனதார வாழ்த்துகிறேன்" என்று பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pa Ranjith Wish Armstrong wife posting for BSP TN


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->