#BigBreaking || படப்பை குணாவுக்கு சற்றுமுன் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள 'படப்பை குணா'வை வரும் 31 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தைச் சேர்ந்தவர் படப்பை குணா. இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இதனால் அவரை போலீசார் கைது செய்ய தேடி வந்தனர்

சிறப்பு தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி என்று சொல்லப்படும் படப்பை குணா இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

கொலை ,கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருவதாகச் சொல்லப்படும் படப்பை குணா தற்போது நீதிமன்றத்தில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 

இந் நிலையில், நீதிமன்றத்தில் சரணடைந்த படப்பைக் குணாவை வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை, நீதிமன்ற காவலில், பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, படப்பை குணா சரணடைந்தால் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Padappai Guna Case Court Order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->