ராகுல் வெளிநாட்டு பயணம், காஷ்மீரில் தாக்குதல்! பாஜக மீது பாய்ந்த வழக்கு!
Pahalgam attack Rahul Gandhi BJP karnataka police case file
ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணங்களுக்கும், காஷ்மீரில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் இடையே தொடர்பு உள்ளது எனச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு பதிவைத் தொடர்ந்து, கர்நாடக பாஜக ஐடி பிரிவுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையும், அதே சமயத்தில் ராகுல் காந்தி மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தையும் தொடர்புபடுத்தி அந்தப் பதிவு பகிரப்பட்டது.
பதிவில், "ராகுல் காந்தி ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும் போதும், நாட்டில் மோசமான சம்பவங்கள் நடைபெறுகின்றன" என அவரது புகைப்படத்துடன் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதற்கு எதிராக, கர்நாடக காங்கிரசின் சட்ட மற்றும் மனித உரிமைகள் பிரிவு தலைவர் சி.எம்.தனஞ்சயா புகார் அளித்ததையடுத்து பெங்களூரு ஹை கிரவுண்ட்ஸ் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்தது.
இது தொடர்பாக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், "தேசிய நலனையும், ஒற்றுமையையும் அரசியலுக்குள் இழுக்கக் கூடாது. ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பும் நமக்கு முதன்மை. நாட்டின் அமைதியைக் காப்பது எங்களின் கடமை" எனக் கூறினார்.
English Summary
Pahalgam attack Rahul Gandhi BJP karnataka police case file