மீண்டும் இந்தியாவை புகழ்ந்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்.!
pakistan imran khan again say about india
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் ஒரு முறை இந்தியாவின் வெளியுறவு கொள்கையை பாராட்டியுள்ளார்.
லாகூரில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட இம்ரான் கான் தெரிவித்துள்ளதாவது,
"அமெரிக்காவின் நண்பனாக சொல்லிக்கொள்ளும் இந்தியா, சுதந்திர வெளியுறவு கொள்கையை பின்பற்றுகிறது. ரஷ்யாவிலிருந்து பொருளாதார தடைகளை தாண்டி, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது.
இந்திய நாட்டின் முடிவுகள் அந்நாட்டின் மக்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டுள்ளவை. ஆனால் நம் நாட்டின் கொள்கை ஒரு சிலரின் முன்னேற்றத்தை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளது.
பாகிஸ்தானுக்கான சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கடைபிடித்ததால் தான் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன்.
நான் மக்களுக்காக கொள்கைகளை முடிவெடுப்பது சர்வதேச சக்திகளுக்கு பிடிக்கவில்லை" என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
English Summary
pakistan imran khan again say about india