காங்கிரஸ் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் கொண்டாடும் - யோகி ஆதித்யநாத்!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சித் தலைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர் அந்த வகையில், உத்திர பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், மோடியும் பாஜகவும் மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியாவில் தீபாவளி போன்று கொண்டாடப்படும். ஆனால் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் கொண்டாடும்.

இந்த இரு வேறுபாடுகளையும் புரிந்து கொண்டு தேச விரோத சக்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.  தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடிக்கு சாதகமாக உள்ள சூழலை சீர்குலைக்க தேச விரோக சக்திகள் முயற்சி செய்து வருகிறது. புல்வாமா சம்பவத்தை வெட்கமின்றி ஆதரித்த பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஒருவர் இப்போது வெளிப்படையாகவே ராகுல் காந்தியை ஆதரித்து வருகிறார்.

சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் அதன் பாதையில் இருந்து விலகி சென்றது. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பயங்கரவாதம் மிகக் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெகுஜன மக்கள் பிரதமர் மோடியின் ஆட்சியை விரும்புகிறார்கள் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan will celebrate if Congress wins Yogi Adityanath


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->