பரமக்குடியில் ஜே.பி.நட்டா வாகன பேரணி! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நாளையுடன் பிரசாரம் முடிவடையும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்கள் ஆதரித்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று பரமக்குடியில் வாகன பேரணியில் ஈடுபட உள்ளார். 

இதற்காக ஹெலிகாப்டர் மூலம் பரமக்குடி வரும் ஜே.பி. நட்டா வாகன பேரணியாக காந்தி சிலை வரை மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். 

பின்னர் காந்தி சிலை அருகே திறந்த வேனில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பேச உள்ளார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரமாக செய்து வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paramakkudy JP Nadda motor rally


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->