இன்று கைது செய்யப்பட்ட முக்கிய புள்ளி : கொந்தளிப்பில் டிடிவி தினகரன்!  - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் பகுதியில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. ஆனால், விவசாயிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் இருக்கும் பகுதியில் புதிய விமான நிலையம் மைக்க கூடாது என்று, விவசாயிகள் பொது மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

மேலும், இந்த விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் அடுத்த ஏகனாபுர கிராம மக்கள் தொடர்ந்து 50 நாட்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பள்ளி மாணவ, மாணவிகள் பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில், இன்று விவசாய கூட்டமைப்பு சார்பாக மிகப்பெரிய போராட்டம் நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்ள மாநில விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன் செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்கு வந்தபோது அங்கே அவரை போலீசார் கைது செய்தனர். 

இந்த கைது நடவடிக்கைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் நடத்திவரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க சென்ற விவசாயக் கூட்டமைப்பின் தலைவர் பி ஆர் பாண்டியன் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது. அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

எந்தத் திட்டமானாலும், மக்களை அழைத்துப் பேசி அவர்களுடைய ஒத்துழைப்போடு செயல்படுத்துவதுதான் சிறப்பானதாக இருக்கும். அதைவிட்டுவிட்டு ஜனநாயகப்பூர்வமான போராட்டங்களை அதிகாரத்தின் துணைகொண்டு ஆட்சியாளர்கள் ஒடுக்க நினைக்கக் கூடாது" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

parandur airport protest pr pandiyan arrest issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->