பாஜக அலுவலகம் உள்பட 2 இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு.. கோவையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கோவை பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் இன்று இரவு பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை காந்திபுரம் விகே மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தின் மீது நேற்று இரவு‌ இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். ஆனால் பெட்ரோல் நிரப்பப்பட்ட அந்த பாட்டில் வெடிக்கவில்லை.

இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தடயவியல் நிபுணர்கள் வந்து சோதனை நடத்தி தடயங்களை சேகரித்தனர்.

 தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாஜகவினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பினர். ஆ.ராசாவுக்கு எதிராக பேசிய பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இது தவிர இன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் அலுவலங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petrol bombing at 2 places including BJP office in Coimbatore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->