பழனியில் பரபரப்பு.. பி.எஃப்.ஐ மதுரை மண்டல தலைவர் கைது.. என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி..!!
Pfi madurai zone head arrested by Nia
தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை, மதுரை, தேனி, திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் முகமது கைசர் என்பவர் பழனியில் டீக்கடை நடத்தி வரும் நிலையில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளயில் முகமது கைசர் வீட்டிற்கு வந்த தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஏற்கனவே இவரது வீட்டில் 2 முறை என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சியின் உறுப்பினர்கள் சதாம், ஜியாவுல்ஹக் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த ஹபீப் ரகுமான் ஆகிய 4 பேர்களிடம் கடந்த ஜனவரி மாதம் விசாரணை நடத்தி இருந்தனர்.
தற்போது திருப்புவனம் ராமலிங்கம் படுகொலை, கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்துவதாக தகவல் கசிந்துள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் பழனியில் விசாரணை நடத்திய நிலையில் அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான இஸ்லாமியர்கள் திரண்டதால் பழனியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
English Summary
Pfi madurai zone head arrested by Nia