#BREAKING | விடாமல் அடிக்கும் மத்திய அரசு - பிஎஃப்ஐ அமைப்புக்கு அடுத்த ஆப்பு! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத, தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கி குற்றச்சாட்டில் 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI)' அமைப்புக்கு மத்திய அரசு தடை வைத்துள்ள நிலையில், அந்த அமைப்பின் இணையதள பக்கத்தையும் மத்திய அரசு முடக்கியுள்ளது.

முஸ்லீம் சமுதாய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

பயங்கரவாத கும்பலுக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் அந்த அமைப்பின் மீது தொடர் புகார் எழுந்து வந்தது.

புகார்களின் அடிப்படையில், நாடு முழுவதும் தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ, அமலாக்கத் துறை இணைந்து சோதனை நடத்தியது.

இந்த இரு நாள் சோதனையில் 356 பேர் கைது செய்யப்பட்டனா். மேலும், சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, ஆவணங்களின் அடிப்படையில் பிஎஃப்ஐ அமைப்பு மற்றும் அதன் 8 துணை அமைப்புகள் சட்டவிரோத இயக்கமாக அறிவித்து 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், பிஎஃப்ஐ அமைப்பின் இணையதளத்தை முதல்கட்டமாக மத்திய அரசு முடக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PFI Website Ban Now


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->