தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்.. பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைப்பு.!!
pm modi open to 11 medical colleges
தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் சுமார் 100 முதல் 150 மாணவர்கள் வரை மொத்தம் 1450 மாணவர்கள் கூடுதலாக மருத்துவ கல்வி படிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த 11 புதிய மருத்துவக்கல்லூரிகளையும் பிரதமர் நரேந்திர மோடி விருதுநகரில் இன்று நடைபெற இருந்த விழாவில் நேரில் பங்கேற்று தொடங்கி வைக்க இருந்தார். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையை ரத்து செய்யப்பட்டது. ஆகையால் டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைக்கிறார்.
இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளின் கட்டிடங்களை திறந்து வைக்கிறார். மேலும், மத்திய அரசு நிறுவனமான செம்மொழி தமிழ் ஆராய்ச்சி மைய வளாக கட்டிடத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்.
English Summary
pm modi open to 11 medical colleges