குடும்ப அரசியலை வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி.!
pm modi say about family politics issue april
பாஜகவின் 42-வது ஆண்டு விழாவில், பா.ஜ.க. தொண்டர்களிடம், காணொலி மூலமாக பிரதமர் மோடி இன்று காலை உரையாற்றினார். அதில்,
"நான்கு மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதை அடுத்து, இன்றைய நிறுவன தினம் கொண்டாடப்படுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பாராளுமன்ற மேல் சபையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு 100 உறுப்பினர்களை கொண்டுள்ள முதல் கட்சி என்ற பெருமையையும் பாஜக பெற்றுள்ளது.
முந்தைய அரசுகள் குறிப்பிட்ட பிரிவினருக்காகவே ஆட்சி செய்து, மத்தியில் ஊழலும், வெறுப்புணர்வும் வாக்கு வங்கியின் பக்க விளைவுகளாகவே இருந்தது.
குடும்ப அரசியல் உள்ள கட்சிகள், அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி ஊழலில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களிலும் அவர்கள் தீவிர அரசியலில் உள்ளனர். குடும்ப அரசியலால் இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
குடும்ப அரசியல் காட்சிகள் திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை. இளைஞர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு வராமல் துரோகம் செய்கின்றனர்.
ஆனால், பாஜக எந்த விதத்திலும் வேறுபாடுகள் பார்ப்பதில்லை. அனைவருக்கும் பொதுவான வகையில் சமூக நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகின்றது. அனைத்து தரப்பினருக்குமான கட்சியாக பாஜக விளங்குகிறது" என்று பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் தெரிவித்தார்.
English Summary
pm modi say about family politics issue april