சென்னை வருகிறாரா பிரதமர் மோடி? - வெளியான தகவல்!
PM Modi Will Visit chennai
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசின் இந்தியா கூட்டணிக்கும் , பாஜகவின் தேசிய கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவியது. பாஜக தனித்து 240 இடங்களிலும், காங்கிரஸ் தனித்து 99 இடங்களிலும் வென்றுள்ளன. ஆனால் ஆட்சியமைக்க 272 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
இதையடுத்து பாஜக தனது கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஜனாதிபதியிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதையடுத்து மத்தியில் தேசியஜனநாயக கூட்டணியி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி 3ஆவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் இத்தாலியில் நடைபெறும் ஜி 7 அமைப்புகளின் 50 ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார். மூன்றாவது முறை பிரதமராக பொறுப்பேற்ற பின் இதுவே அவரது முதல் வெளிநாட்டு பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரதமர் மோடி ஜூன் 20 அன்று சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் வரை இயங்க உள்ள வந்தே பாரத் ரயில் சேவையின் தொடக்க விழாவிற்காக தான் பிரதமர் மோடி சென்னை வரவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மூன்றாவது முறை பிரதமராக பதவி ஏற்ற பின் , இதுவே பிரதமர் மோடியின் முதல் தமிழ்நாட்டு பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
PM Modi Will Visit chennai