குடும்ப வாரிசு கட்சிகளுக்கு ஊழல் தான் அடித்தளம் - விளாசிய பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம், வாரங்கலில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "இன்று, ஒவ்வொரு வகை உள்கட்டமைப்புக்கும் முன்பை விட வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள், விரைவுச்சாலைகள், பொருளாதார முதலீடுகள், தொழில்துறை வளர்ச்சி மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளது.

தெலுங்கானாவில் தற்போதைய அரசு, பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசை தவறாக பேசி, ஒரு குடும்பத்தை அதிகார மையமாக்கி வருகிறது.

தெலுங்கானாவின் பொருளாதார வளர்ச்சியை, இந்த குடும்ப அதிகார மையம் பின்னோக்கி தள்ளியது.தெலுங்கானாவை ஊழலில் தள்ளியது.

தெலுங்கானாவில் செய்யாத திட்டம் எதுவும் இல்லை. கே.சி.ஆர் அரசு ஊழல் நிறைந்த அரசுக உள்ளது. இந்த அனைத்து குடும்ப&வாரிசு கட்சிகளின் அடித்தளம் ஊழலில்தான் உள்ளது.

குடும்ப&வாரிசு கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஊழலை நாடே பார்த்தது தான். இப்போது, தெலுங்கானா மாநிலம் முழுவதும் பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி மூலம் ஊழலை பார்த்து கொண்டு இருக்கிறோம்.

தெலுங்கானா மக்களுக்கு இந்த பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சியும் ஆபத்தானது தான்" என்று பிரதமர் மோடி பேசினார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Narendra Modi Say About Family Politics Warangal Telangana


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->