56 கிலோ கேக், மது, போதை ஒழிப்பு உறுதிமொழி, இரத்த தானம், அன்னதானம்! அன்புமணி இராமதாஸ் பிறந்தநாளை கொண்டாடிய பாமகவினர்!
PMK Anbumani Ramadoss Birthday Thanjai PMK
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி இராமதாஸின் 56-வது பிறந்தநாளை முன்னிட்டு, தஞ்சை மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின், கோ.ஆலயமணி உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பாக 56 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
மேலும், அன்புமணி இராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு மது, போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்று, நூற்றுக்கு மேற்ப்பட்ட நபர்கள் இரத்த தானமும், உடல் தானமும் செய்தார்கள்.
மேலும், ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கி அன்புமணி இராமதாஸ் பிறந்தநாளை பாமகவினர் கொண்டாடினர்.
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மத்திய அமைச்சர் எல். முருகன், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், நாம் தமிழர் கட்சி சீமான் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏசி சண்முகம் உள்ளிட்ட தலைவர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தொலைபேசி மூலம் அன்புமணி இராமதாசுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Birthday Thanjai PMK