ஏன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கக் கூடாதா? ஸ்டாலின் CM ஆகத்தான் திருமாவளவன் கட்சி தொடங்கினாரா என்ன? பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்ததாவது, "ஏன் ஆட்சி அதிகாரத்தில் கேட்கக் கூடாதா? திருமாளவன் போட்ட அந்த வீடியோ பதிவு சரியானது தான் என்னைப் பொருத்தவரை. இதில், என்ன தவறு இருக்கிறது. 

திமுக ஆட்சிக்கு வரணும், அண்ணாதிமுக ஆட்சிக்கு வரணும் என்று யாரும் அரசியல் கட்சி தொடங்கவில்லை. திருமாவளவன் திமுக ஆட்சிக்கு வர வேண்டும், ஸ்டாலினை முதலமைச்சராக வேண்டும் என்று கட்சி தொடங்கவில்லை. அவர் ஆட்சிக்கு வர வேண்டும், அவர்களுடைய கட்சியின் கொள்கைகளை அமல்படுத்த வேண்டும் என்று தான் கட்சியை தொடங்குகிறார்கள். 

அந்த வகையில் திருமாவளவன் போட்ட வீடியோ பதிவு சரியானதுதான். ஆனால், அதனை நீக்கியது தான் சரியில்லை. திமுக  கோவப்படுவார்களோ என்று நீக்கினாரோ? எதற்காக அதை நீக்க வேண்டும் என்று புரியவில்லை. 

67 ஆண்டுகளாக இந்த இரண்டு கட்சிகளும் ஆட்சி செய்து, இப்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் நிலமை மிக மோசமாக உள்ளது. முதலீடு குறைந்து இருக்கிறது. 

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ஊழல், லஞ்சம், கொலை நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் மதுவும், கஞ்சாவும் தான். பள்ளிக்கூடங்களிலும் பிரச்சனைகள் பல இருக்கின்றன. இதில் கவனம் செலுத்த வேண்டும்.

நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டுவர பலமுறை பாராளுமன்றத்தில் நாங்கள் பேசி இருக்கிறோம். குஜராத்தில் கொண்டு வந்ததை நாடு முழுவதும் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு மாநிலமும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற ஒரு பாலிசி இருக்கிறது. மதுவை பொருத்தவரை அது மாநில பட்டியலில் இருக்கிறது. மாநில அரசு தான் அதை செய்ய வேண்டும். 

அனைத்து மாநிலங்களிலும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். ஒரேடியாக கொண்டு வரவில்லை என்றாலும், படிப்படியாக கொண்டு வர வேண்டும்.

இந்தியாவில் மது ஒழிப்புக்கு மாநாடு நடத்தினாலும், போராட்டம் நடத்தினாலும், அதை யார் நடத்தினாலும் நாங்கள் ஆதரவு தெரிவிப்போம். அந்த வகையில் திருமாவளவன் மாநாடு நடத்தினால் ஆதரவு தெரிவிப்போம். அவர் அதற்காக கூப்பிட்டார், கூப்பிடவில்லை என்றெல்லாம் பிறகுதான். மதுவிலக்கு, மது ஒழிப்பு என்பது எங்களுடைய கட்சியின் அடிப்படை கொள்கை. 

மது ஒழிப்பில் நாங்கள் பிஹெச்டி படித்திருக்கிறோம். திருமாவளவன் இப்போதுதான் எல்கேஜி வந்திருக்கிறார். எங்கள் மருத்துவர் அய்யா அவர்கள் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே 1980 முதல் மது ஒழிப்பு கொள்கையை கடைப்பிடித்துக் கொண்டு வருகிறார். 

எண்கள் கட்சியை இழிவுபடுத்தி பேசுவதை திருமாவளவன் நிறுத்தி கொள்ள வேண்டும். எங்களுக்கும் பேசத் தெரியும், அவர்கள் கட்சி குறித்து எங்களாலும் தரக்குறைவாக பேச தெரியும். இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் மாநாடு நடத்தினால் நடத்தி விட்டுப் போங்க" என்று அனபமணி இராமதாஸ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Anbumani Ramadoss Say About Thirumavalavan X Post


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->