#சற்றுமுன் | சொன்னபடியே அறிவிப்பை வெளியிட்ட பாமக தலைவர் அன்புமணி.!
PMK Announce for parandur airport pmk 7 member committee
பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக, 12 கிராம மக்களை சந்திக்க பாமக சார்பில் 7 பேர் குழு அமைக்கப்படும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பாமக சார்பில் 7 பேர் குழு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அந்த அறிவிப்பில், "காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் மற்றும் அதையொட்டிய 12 கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. பாதிக்கப்படவுள்ள 12 கிராம மக்களின் கருத்துகளை அறிவதற்காக அவர்களின் பிரதிநிதிகளை நேற்று காஞ்சிபுரம் நான் சந்தித்து பேசினேன். தங்களின் வாழ்வாதாரமான நிலங்களை பறிக்கக்கூடாது என்பதே அவர்களின் கருத்தாகும்.
நிலம் கையகப்படுத்தப்படவுள்ள 12 கிராம மக்களை நேரில் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிவதற்காக பா.ம.க. சார்பில் குழு அமைக்கப்படும் என்று காஞ்சிபுரம் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் அறிவித்து இருந்தேன். அதன்படி பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.
குழுவின் விவரம்:
1. ஜி.கே.மணி - கவுரவத் தலைவர், பா.ம.க
2. திலகபாமா - பொருளாளர், பா.ம.க
3. ஏ.கே.மூர்த்தி - வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர், பா.ம.க.
4. வழக்கறிஞர் க.பாலு - செய்தித் தொடர்பாளர், பா.ம.க
5. பசுமைத் தாயகம் அருள் - தலைவர், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
6. பெ. மகேஷ் குமார் - மாவட்ட செயலாளர், காஞ்சிபுரம் மேற்கு, பா.ம.க.
7. அரிகிருஷ்ணன் - மாவட்ட செயலாளர், காஞ்சிபுரம் கிழக்கு, பா.ம.க.
இந்தக் குழுவினர் பரந்தூர் உள்ளிட்ட 12 கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து கட்சித் தலைமையிடம் அறிக்கை அளிப்பார்கள். அதனடிப்படையில் தமிழக அரசிடம் கலந்து பேசி இந்த சிக்கலுக்கு தீர்வு காண பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்."
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
PMK Announce for parandur airport pmk 7 member committee