சமூகநீதி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தியபின் பாமக வேட்பாளர் சி.அன்புமணி வேட்புமனு தாக்கல்!! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார்.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி சமீபத்தில் மறைந்தார். அதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. நடந்து முடிந்த மக்களவைதேர்தல் உடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்றும் அதனை தொடர்ந்து ஜூலை 14ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. பாமக சார்பில் வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும் பாமகவும் இடையே நேரடி போட்டி நிலவிவருகிறது. இரண்டு கட்சி வேட்பாளர்களும் நிர்வாகிகளும் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், விக்கிரவாண்டி தாலுக்கா அலுவலகத்தில் திமுகவைச் சேர்ந்த அன்னியூர் சிவாவும் பாமக வேட்பாளர் சி.அன்புமணியும் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

விக்கிரவாண்டி இடை தேர்தலை முன்னிட்டு விக்கிரவாண்டி தொகுதியில் இருவரும் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk candidate C Anbumani filed his nomination


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->