சுனாமி (ஆழிப்பேரலை) 17 ஆம் ஆண்டு நினைவு நாள் - பாமக தலைவர் ஜி.கே.மணி அஞ்சலி.! - Seithipunal
Seithipunal


சுனாமி (ஆழிப்பேரலை) 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பாமக தலைவர் ஜி.கே.மணி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "2004 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26 ஆம் நாள் சுனாமி (ஆழிப்பேரலை) யின் கோரத் தாண்டவத்தின் கொடூரத்தால் சென்னை மெரினாக் கடற்கரையிலிருந்து கன்னியாகுமரியின் கொட்டில்பாடு கிராமம் வரை பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழப்பு, வீடுகள் - உடமைகள் எல்லாம் இழப்பு என சொல்லி மாளா சோகக் கதை நடந்த நாள். 

நாகை மாவட்டம் நாகை, வேளாங்கன்னி, பூம்புகார் ஆகிய இடங்களில் மட்டும் 6,065 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதேபோல் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்லாயிரம் பேர் உயிரிழப்பு ஒரே நாளில் அந்த நாளை நினைவு கூறும்போது பேரதிர்ச்சியும் வேதனையும் கவலைகொள்ளச் செய்கிறது. அந்தக் கொடூர சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு இன்று நினைவஞ்சலி செலுத்துகிறோம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஜி.கே.மணி தெரித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK HEAD GK MANI MOURNING TO Tsunami


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->