"பென்னாகரம் ஃபார்முலா பாத்திருப்பீங்க..இப்போ விக்கிரவாண்டி ஃபார்முலா பாக்கபோறீங்க" - அன்புமணி!! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி தாலுக்கா அலுவலகத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி சமீபத்தில் மறைந்தார். அதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. நடந்து முடிந்த மக்களவைதேர்தல் உடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்றும் அதனை தொடர்ந்து ஜூலை 14ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. பாமக சார்பில் வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும் பாமகவும் இடையே நேரடி போட்டி நிலவிவருகிறது. இரண்டு கட்சி வேட்பாளர்களும் நிர்வாகிகளும் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், விக்கிரவாண்டி தாலுக்கா அலுவலகத்தில் திமுகவைச் சேர்ந்த அன்னியூர் சிவாவை தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாசுடன் வந்து பாமக வேட்பாளர் சி.அன்புமணியும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், திமுக அமைச்சர்கள் இங்கையே தங்கி, ஓட்டுக்கு எவ்வளவு குடுக்கலாம். மக்களை எப்படி வாங்கலாம் என ஈரோடு இடைத்தேர்தலில் செய்ததைபோல் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இது விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறாது. காரணம் இது எங்களுடைய பகுதி, நாங்கள் பலமாக இருக்கின்ற தொகுதி. 

கடந்த காலங்களில் பென்னாகரம் பார்முலா பார்த்து இருப்பிங்க, இது விக்கிரவாண்டி பார்முலா பாக்கப்போறீங்க. தேர்தல் நேரத்தில் மட்டும் ஆளும்கட்சி அமைச்சர்கள் விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிறார்கள். இதுவரைக்கும் திமுக ஒன்னும் செய்யவில்லை இந்த விக்கிரவாண்டி தொகுதிக்கு நாங்கள் சொல்லவில்லை மக்கள் சொல்கிறார்கள் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk leader anbumani press meet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->