தமிழகத்தில் இந்த மூன்று தான் முக்கிய பிரச்சனை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!
PMK Protest Dr AMR Speech part 1
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று, இன்று பாமக சார்பில் சென்னையில் அறப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்திய அக்கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் பேசியதாவது,
"தமிழகத்தில் அடுத்த தலைமுறையை சீரழிக்க மூன்று பெரிய பிரச்சினைகள் உள்ளது. மது கடை, போதை பழக்கத்திற்கு அடிமையாகக்கூடிய பிரச்சனை, ஆன்லைன் சூதாட்டம். இந்த மூன்று பிரச்சனைகளுக்கு தீர்வு காணுகின்ற வகையில், தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது.
மதுவை எதிர்த்து நாற்பத்தி மூன்று ஆண்டுகள் மருத்துவர் அய்யா தலைமையில் போராடி வருகின்றோம். போதை பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று, கடந்த 15 ஆண்டு காலமாக பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றோம். இந்த ஆன்லைன் சூதாட்டம் அதிக அளவில் இளைஞர்களை பாதிக்கக்கூடிய ஒரு சாபக்கேடு, இதை தடை செய்ய வேண்டும் என்று மருத்துவர் அய்யா, பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 7 ஆண்டு காலமாக போராட்டம் செய்து வருகிறது.
அந்த அடிப்படையில்தான், தமிழக அரசு உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று, முதல்கட்ட ஆர்பாட்டம் என் தலைமையில் இன்று நடந்து கொண்டிருக்கிறது.
இந்த ஆன்லைன் சூதாட்டம் சூதாட்டத்திற்கு மிகப்பெரிய பின்னணி இருக்கிறது. கடந்த 2009இல் ஓரளவுக்கு பிரபலமாக இருந்து, 2014 - 15 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக மாறியது. பின்னர் 2016ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால், அரசாங்கம் இதனை கண்டுகொள்ளவில்லை. பிறகு மருத்துவர் அய்யா, பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை இதனை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல போராட்டங்களை செய்தது. இதற்கான பட்டியல் என்னிடம் உள்ளது. மருத்துவர் அய்யா அவர்கள் கொடுத்த அறிக்கைகள், ட்விட்டர் பதிவு, நான் கொடுத்த அறிக்கைகள், ட்விட்டர் பதிவுகளும் எத்தனை; இத்தனை அறிக்கைகளும், டிவிட்களும் போட்ட இந்தியாவில் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி மட்டும்தான். அத்தனையும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று தான். உண்மையிலேயே மக்கள் நலன் உள்ள கட்சி என்றால், அது ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி மட்டும்தான்.
இதேபோல் தமிழக சட்டமன்றத்திலும், நம்முடைய தியாகச் செம்மல் ஜிகே மணி அவர்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார்கள். இப்படி பல வகைகளில் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி" என்று அன்புமணி இராமதாஸ் பேசினார்.
English Summary
PMK Protest Dr AMR Speech part 1