CM ஸ்டாலின் பிறந்த நாள்: டாக்டர் இராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
PMK Ramadoss Wish MK Stalin Annamalai Vijay DMK
பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று 72-ஆம் பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்.
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று 72-ஆம் பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு, பாஜக சார்பாக, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
English Summary
PMK Ramadoss Wish MK Stalin Annamalai Vijay DMK