அதிரடி! பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் ஒரு திட்டமா? - கலைஞர் கைவினை திட்ட விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரம் குன்றத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் 'கலைஞர் கைவினைத் திட்டத்தை' தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மொத்தம் 8951 பயனாளிகளுக்கு ரூ.34 கோடி மானியத்துடன் ரூ.170 கோடி கடன் ஒப்புதலுக்கான ஆணைகள் இன்று வழங்கப்பட்டன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

மேலும் இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது,"கலைஞர் கைவினைத் திட்டம் என்பது சமூக நீதியை, சம நீதியை, மனித நீதியை, மனித உரிமை நீதியை நிலைநாட்டும் திட்டம்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் சமூக நீதியை நிலைநாட்டும் திட்டமில்லை.விஸ்வகர்மா திட்டத்தில் இணைவதற்கு 18 வயது முதல் அனுமதி என்ற வயதினை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

18 வயது என்பது ஒருவர் உயர்கல்வி பயிலும் வயதா? அல்லது குலத்தொழிலை செய்யும் வயதா?மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம், மாணவர்களை கல்வியை விட்டு வெளியேற்றும் திட்டம்.

சாதிய பாகுபாடு நிறைந்த இந்தியாவில் குலத்தொழிலை ஊக்குவிக்கும் திட்டத்தை எப்படி ஏற்பது?மனசாட்சி உள்ள யாரும் விஸ்வகர்மா திட்டத்தை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.விஸ்வகர்மா திட்டத்தில் விண்ணப்பிக்கும் வயதை 35 ஆக உயர்த்த வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை வைத்தேன்.

தாம் எடுத்துரைத்த 3 திருத்தங்களை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது" எனத் தெரிவித்தார்.இது தற்போது அரசியல்வாதிகளிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMs Vishwakarma Scheme not good CM MK Stalin speaking Kalaignar Craft Scheme festival


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->