சர்ச்சை பேச்சு!!! காவல் துறை ஏவல் துறையாக மாறிவிட்டது! இபிஎஸ் கூறும் காரணம் என்ன?
police department has become a fraud department EPS condemn
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது," காவல்துறை ஏவல்துறையாக மாறி விட்டது.ரூ.1,000 கோடி டாஸ்மாக்கில் கொள்ளையடித்தது யார் என்று கண்டுபிடியுங்கள். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
சிறுமி முதல் மூதாட்டி வரை தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. பத்திரிகை செய்திகளின் அடிப்படையிலேயே சட்டம் ஒழுங்கு குறித்து பேசுகிறோம்.
மீனவர்கள் பிரச்சனை குறித்தும் அமித்ஷாவிடம் பேசினோம். ஆர்.பி.உதயகுமார் கூறியது பற்றி தெரியவில்லை. தெரியாதது குறித்து தவறாக சொல்லி விடக்கூடாது"எனத் தெரிவித்தார்.
இது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு பலர் இந்த சர்ச்சை பேசினால் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
police department has become a fraud department EPS condemn