அரசியல் கட்சிகளுக்கு கிடுக்குப்புடி., உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு.! அகிலேஷ் யாதவால் சிக்கலில் சிக்கிய அரசியல் கட்சிகள்.! - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் எபவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவரின் அந்த மனுவில், "உத்திரபிரதேசத்தில் உள்ள கைரானா சட்டமன்ற தொகுதியில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளராக வன்முறைக் கும்பலின் தலைவர் நஹித் ஹசனை களமிறக்கியுள்ளது.

ஆனால், அவரின் குற்றப் பதிவுகளை மின்னணு அல்லது சமூக ஊடங்களில் அந்த கட்சி வெளியிடவில்லை. கடந்த 11 மாதங்களுக்கு முன்பு அவர் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் இருந்துள்ளார்.

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலின்போது முதல்கட்ட வேட்புமனு தாக்கல் செய்த முதல் வேட்பாளர் அவர்தான். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த நஹித் ஹசன் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் போது, ஏராளமான சட்டவிரோத பணத்தை பயன்படுத்துகின்றனர். வாக்காளர் அல்லது எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை இவர்கள் தங்களது ஆள் பலத்தை வைத்து மிரட்டுகின்றனர்.

சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி உள்ள இந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், உச்சநீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளையும் துணிச்சலாக மீறி வருகின்றனர்.

ஒவ்வொரு அரசியல் கட்சியும் குற்ற வழக்குகள் உள்ள நபரை ஏன் விரும்புகிறது என்றும், குற்ற பின்னணி இல்லாத வேட்பாளரை அவர்கள் ஏன் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். 

குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறிய அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் ஐந்து மாநிலங்களில் நடக்க உள்ளதால், இந்த மனுவை அவசர வழக்காக பட்டியலிட வேண்டும் என்றும் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் கோரிக்கை வைத்தார். 

இந்த மனுவை ஏற்றுக் கொள்வது குறித்தும், இந்த மனுமீதான விசாரணை செய்வது குறித்தும் பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி என் வி ரமணா மற்றும் முதலாவது அமர்வு நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

political party case in supreme court


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->