கோவை ஈஷா யோகா மைய மர்மம் என்ன? நீதியரசர் சந்துரு தலைமையில் விசாரணை வேண்டும்!
Poovulagin nanbargal sundarrajan want commission to enquire Esha dead's
கோவை ஈஷா யோகா மையத்திலிருந்து கடந்த மாதம் மாயமான பெண் சுபஸ்ரீ, செம்மேடு அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஈஷா யோகா மையத்திற்கு எதிராக அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. பயிற்சிக்காக ஈஷா யோகா மையத்திற்கு வந்த அவர், 18ம் தேதி அங்கிருந்து ஓடிச்செல்லும் காட்சிகள் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.
இதனையடுத்து சுபஸ்ரீயை காணவில்லை என அவருடைய கணவர் காவல் நிலைத்தில் புகார் அளித்திருந்த நிலையில், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஈஷா யோக மையத்தில் என்ன நடக்கிறது என்பதை நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி சுந்தர்ராஜன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அவருடைய டுவிட்டர் பதிவில், "ஈஷா யோக மையத்திற்கு செல்பவர்கள் காணாமல் போவது, பிறகு சில நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்படுவது அல்லது மிரட்சியுடன் திரும்ப வருவது என கடந்த பல வருடங்களாக நடந்துவருகிறது. அதன் தொடர்ச்சியில் இப்போது சுபஶ்ரீ. டிசம்பர் 18 அன்று போனவரை நேற்று சடலமாக மீட்டுள்ளார்கள்.
என்ன நடந்தது என்பதை தமிழக அரசு தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈஷா மய்யத்தில் உள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் இந்திய வனப் பணி, வருவாய்ப் பணி, நிலநிர்வாக துறை, சமூக செயல்பாட்டாளர்கள் கொண்ட குழு அமைக்ப்பட்டு, அந்த மையத்தில் உள்ள கட்டிடங்கள், யானை வழித்தடங்கள், விழாக்கள், பங்கேற்பாளர்களின் விவரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து பொதுவெளியில் வைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." என பதிவிட்டுள்ளார்.
English Summary
Poovulagin nanbargal sundarrajan want commission to enquire Esha dead's