பாலியல் புகாரில் ப்ரஜ்வால் ரேவண்ணாவின் சகோதரர் சூரஜ் ரேவண்ணா கைது..!! - Seithipunal
Seithipunal


 

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒலேநரசிபுரா சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ வாக இருக்கும் எச். டி. ரேவண்ணாவின் மகன்கள் ப்ரஜ்வால் ரேவண்ணா மற்றும் சூரஜ் ரேவண்ணா. இதில் ப்ரஜ்வால் ஹாசன் தொகுதியின் முன்னாள் எம். பி. ஆவார். இவர் தற்போது ஆபாச வீடியோ வெளியான பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் உள்ளார்.

 

இந்நிலையில் தற்போது ப்ரஜ்வாலின் சகோதரர் எம். எல். சி யாக இருக்கும் சூரஜ் ரேவண்ணா, ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த சேத்தன் என்பவர் அளித்த ஓரினச் சேர்க்கை புகாரில் கைது செய்யப் பட்டுள்ளார். இந்த அதிர்ச்சிகர சம்பவத்தின் பின்னணி வருமாறு,

சூரஜ் ரேவண்ணாவால் பாதிக்கப் பட்டுள்ளதாக கூறப்படும் சேத்தன், பெங்களூரு போலீஸ் டிஜிபி அலுவலகத்தில், சூரஜ் ரேவண்ணா தன்னை ஒலேநரசிபுராவில் உள்ள ஒரு பண்ணை வீட்டுக்கு அழைத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தியதாகவும், மிரட்டியதாகவும் புகார் அளித்திருந்தார்.  மேலும் அதற்கான ஆடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அந்த புகாரில் சேத்தன் குறிப்பிட்டுள்ளார்.

 

இதையடுத்து சூரஜ் ரேவண்ணாவை கைது செய்த ஒலேநரசிபுரா போலீசார் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 377, 342 மற்றும் 506 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்நிலையில் பாலியல் வழக்கில் ப்ரஜ்வால் ரேவண்ணாவைத் தொடர்ந்து சூரஜ் ரேவண்ணாவும் கைதாகி உள்ளது கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prajwal Revannas Brother Suraj Revanna Arrested in Sexual Assault Case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->