அமலுக்கு வந்துள்ள வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா; ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்..!
President Draupadi Murmu gives his assent to the Waqf Board Amendment Bill
வக்பு வாரிய சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்டு 08-ஆம் தேதி தாக்கல் செய்தது. பின்னர் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. அடுத்து, பாராளுமன்ற மாநிலங்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிராக கடுமையான எதிர்ப்பை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் முன்வைத்தனர்.

இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், ஆதரவாக 128 வாக்குகளும் , எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து, 17 மணி நேர விவாதத்துக்கு பின் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பப்பட்டது.
இந்த வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த சட்டம் அமலுக்கு வருகிறது.
English Summary
President Draupadi Murmu gives his assent to the Waqf Board Amendment Bill