பிரதமர் மோடியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு..! - Seithipunal
Seithipunal



கடந்த ஜூன் 4ம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பாஜக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக தனித்து 240 இடங்களில் வென்றுள்ளது. இந்நிலையில் ஆட்சியமைக்க 272 இடங்களே போதும் என்ற நிலையில், தற்போது பாஜகவிற்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கிடைத்ததால்  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் பிரதமர் மோடி. 

இந்நிலையில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் மோடியை தங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக பாஜகவின் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். இதையடுத்து அமித்ஷா உள்ளிட்ட பல தலைவர்கள் அதை வழிமொழிந்தனர். 

இதையடுத்து அங்கு பேசிய மோடி, " உங்களை சிலர் அணுகுவார்கள். அமைச்சரவையில் இடம் தருவதாக ஆசை வார்த்தை கூறுவார்கள். நீங்கள் அவர்களின் போலி வதந்திகளில் இருந்து விலகியே இருக்க வேண்டும். அவர்கள் போலி செய்தி பரப்புவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். இந்த போலிகளுக்கு நீங்கள் இரையாகி விடக்கூடாது" என்று பிரதமர் மோடி சூசகமாக எதிர்க்கட்சியான காங்கிரசின் இந்தியா கூட்டணியினரை குறித்துப் பேசினார்.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிரதமர் மோடிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President Droupadi Murmu Called Narendra Modi To Take Oath


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->