மக்களவையைக் கலைத்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி  வரை தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஜூன் 4ம் தேதி அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன.

இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சிகளும், பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் நேரடியாக களத்தில் மோதின. இந்நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க 272 இடங்களைக் கைப்பற்றியிருக்க வேண்டும்.

இதையடுத்து பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றி உள்ளதால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. எனவே மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடியது.

அதில் அமைச்சரவையைக் கலைக்க பரிந்துரைக்கப் பட்டதையடுத்து பிரதமர் மோடி ஜனாதிபதி திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் சந்தித்து மக்களவையைக் கலைக்கும் தீர்மானத்தையம், மேலும் தனது ராஜினாமா கடிதத்தையும் அளித்துள்ளார். 

இதையடுத்து, அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, 17வது மக்களவையை ஜனாதிபதி திரௌபதி முர்மு கலைத்தார் என்று ராஷ்டிரபதி பவனில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கிடைத்ததால் மீண்டும் இன்றே ஜனாதிபதியை பிரதமர் நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

President Droupadi Murmu Dissolved Parliament


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->