முஸ்லிம் பெண்களுக்கு சுதந்திரம் வழங்கியவர் பிரதமர் மோடி - பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலம் சரஸ்வதி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வெள்ளி கரண்டியுடன் பிறந்த அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஜன்தன் கணக்குகளை கேலி செய்தார்கள் என்றும் ஆனால், விவசாயிகளுக்கு இப்போதுதான் உண்மையான அர்த்தம் புரிந்து விட்டது என தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 10.50 கோடி விவசாயிகளின் கணக்கில் தலா ரூ.2000 வரவு வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மதவாத அரசியல் செய்யும் கட்சிகளுக்கு ஆப்கானிஸ்தானிலோ, வங்கதேசத்திலோ, ஈரான், ஈராக், இந்தோனேஷியாவிலோ சட்டபூர்வ முத்தலாக் கிடையாது என்பது தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடைமுறையில் இருந்த முத்தலாக் ஒழிக்கும் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் நமது மதச்சார்பற்ற நாட்டில் வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம் பெண்களுக்கு பிரதமர் மோடி சுதந்திரம் அளித்துள்ளதாகவும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime minister Modi freedom to muslim womens


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->