15ம் தேதிக்குள்.."ஒரே நாடு ஒரே தேர்தல்".. வெளியான முக்கிய அறிவிப்பு.!!
Public feedback to One Country One Election Committee
இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு ஏற்கனவே2 முறை இரண்டு முறை கூடி ஆலோசனை செய்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சட்டங்களில் திருத்தம், நிர்வாக கட்டமைப்பு மாற்றம் குறித்த பரிந்துரைகளை https://onoe.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது sc-hic@gov.in என்ற மின்னஞ்சலிலோ பொதுமக்கள் அனுப்பலாம். அவை குறித்து உயர்நிலை குழு கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் "நாடாளுமன்ற மக்களவை மாநில சட்டப்பேரவைகள் நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதற்கு அரசியலமைப்பின் கீழ் தற்போது உள்ள கட்டமைப்பை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து பரிந்துரை வழங்குவதற்காக இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டங்கள் மற்றும் அவற்றின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் பிற சட்ட விதிகளில் குறிப்பிட்டுள்ள திருத்தங்களை ஆய்வு செய்து பரிந்துரைக்கவும் பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.
அரசியலமைப்பில் சாத்தியமான திருத்தங்கள் மாநிலங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டுமா என்பதையும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் இந்த குழு ஆராயும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் குலாம் நபி ஆஷாத் தவிர 15-வது நிதி குழு தலைவர் எம் கே சிங், மக்களவை முன்னாள் தலைமை செயலாளர் சுபாஷ் சி காஷியப், முன்னாள் தலைமை விஜிலென்ஸ் ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் சிறப்பு அழைப்பாளராகவும் சட்ட செயலாளர் நிதின் சந்திரா செயலாளராகவும் கூட்டத்தில் பங்கேற்பார்கள். கடந்த அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற குழுவின் இரண்டாவது கூட்டத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையிலான சட்ட ஆணையத்தின் உறுப்பினர்களுடன் விவாதிக்கப்பட்டது.
English Summary
Public feedback to One Country One Election Committee