வெளியே போ - விரட்டியடிக்கப்பட்ட ஜோதிமணி விவகாரம் : சமயம் பார்த்து ராகுல்காந்திக்கு பதிலடி கொடுத்த அதிமுக.! - Seithipunal
Seithipunal


உண்மையிலேயே ராகுல்காந்திக்கு பெண்ணினத்தின் மீது அக்கறை இருக்கும் என்றால், அவரின் கட்சியின் பெண் எம்பி.,யை அவமரியாதை செய்த திமுக அமைச்சரை கண்டித்து, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று, புதுச்சேரி மாநில அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இன்று புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில்,

"இந்தியாவில் உள்ள ஆண்கள், பெண்களை மனிதர்களாக கூட கருதவில்லை., இது ஒரு வெட்கக்கேடான உண்மை என்று அண்மையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தியின் கட்சியை சேர்ந்த பெண் எம்பி ஜோதிமணியை, கூட்டணி கட்சியான திமுக அமைச்சரான செந்தில் பாலாஜியால் அவமரியாதை செய்யப்பட்டு துரத்தி அடிக்கப்பட்டு இருக்கிறார்.

ராகுல்காந்தியின் கட்சியை சேர்ந்த ஒரு பெண் எம்பி, திமுகவின் மாநில அமைச்சரால் ஏற்படுத்தப்பட்ட அவமரியாதை கண்டிக்காத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, ஒட்டுமொத்த ஆண்களைப் பற்றி குறை கூறுவதற்கு எந்த உரிமையும் இல்லை.

உண்மையிலேயே ராகுல் காந்திக்கு பெண்ணினத்தின் மீது அக்கறை இருக்குமென்றால், இந்த சம்பவத்திற்கு திமுகவை கண்டித்து, கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும்" என்று அன்பழகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puducherry admk jothimani issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->