நிதி நிறுவன மோசடிக்கு தண்டனை; உயர் போலீஸ் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!
Punishment for financial institution fraud MK Stalin holds a meeting with top police officials
நிதி நிறுவன மோசடியில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிப்பது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
சென்னை, தலைமை செயலகத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன் போது நிதி நிறுவன மோசடியில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்கும் வகையில், உயர் போலீஸ் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி, ஏடிஜிபி, உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். குறித்த கூட்டத்தில், நிதி நிறுவன மோசடியால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும், நிதி நிறுவன மோசடியை தடுப்பது குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்டவை போன்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆலோசனை வழங்கியுள்ளார்.
English Summary
Punishment for financial institution fraud MK Stalin holds a meeting with top police officials