பிரதமரின் வாகனத்தை வழிமறித்தது ஏன்? போராட்டக்காரர்களின் அதிர்ச்சி அளிக்கும் பேட்டி.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நேற்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இருந்த நிகழ்ச்சிக்காக, பிரதமர் மோடி சாலை வழியாக செல்லும் பொழுது போராட்டக்காரர்கள் திடீரென சாலையை மறித்தனர். 

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில், பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று, பாஜக தொண்டர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

இந்நிலையில், பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்திய போராட்டக்காரர்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "பிரதமரின் காரைதான் நாங்கள் வழிமறித்தோம் என்பதே எங்களுக்கு தெரியாது.

அந்த வழியாக தான் பிரதமர் செல்வார் என்பது கூட எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கு அவரின் வாகனத்தை நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை. இதை எங்களால் நம்ப முடியவில்லை. வழக்கமாக பிரதமர் வாகனம் செல்லும் வழித்தடங்கள் குறைந்தபட்சம் 2-3 மணி நேரத்திற்கு முன்பே பாதுகாப்பு வளையத்தில் இருக்கும்" என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PUNJAB PM MODI ISSUE


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->